பல கோடி ரூபாய் சீட்டு நிதி மோசடி செய்தது தொடர்பாக, ரோஸ் வேலி குழுமத்துக்கு சொந்தமான பல் வேறு இடங்களில் சிபிஐ அதிகாரி கள் நேற்று சோதனை நடத்தினர்.
மேற்கு வங்கத்தில் 27, திரிபுரா வில் 7, ஒடிஸா, அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், பிஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிதி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத் துறை இயக்குநரகமும் இந்த குழுமத்துக்கு சொந்தமாக நாடு முழுவதிலும் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு சீல் வைத்துள்ளது. அத்துடன் ரோஸ் வேலி குழுமத்தின் தலைவர் கவுதம் குண்டுவிடம் விசாரணை நடத்தி இருக்கிறது.
கடந்த பிப்ரவரி 25-ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, இந்தக் குழுமத்துக்கு சொந்தமாக ஒடிஸாவில் உள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரோஸ் வேலி குழுமம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.10,281 கோடியும் சாரதா குழும நிறுவனங்கள் ரூ.2,459 கோடியும் வசூலித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக நிதித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago