மத்திய சுகாதார துறை அமைச்சரை நீக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

By பிடிஐ

எய்ம்ஸ் நிர்வாகத்தில் குறுக்கிட்ட மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவையில் நேற்று வலியுறுத்தியது.

மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது, மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் இந்தப் பிரச்சினையை எழுப்பி பேசும்போது, “எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இயந்திரங்கள் மற்றும் மருந்துகள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றது தொடர்பாக அதன் கண்காணிப்புப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், மாநிலங் களவை உறுப்பினர் என்ற முறை யில் கடந்த 2013-ம் ஆண்டு மே 23 மற்றும் 2014-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தப் பிரிவை கலைக்க வேண்டும் என்று ஜே.பி.நட்டா வலியுறுத்தினார். அப்போதிருந்த காங்கிரஸ் அரசு அதை நிராகரித்துவிட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, எய்ம்ஸ் மருத்துவமனையின் கண்காணிப்புப் பிரிவு தலைமை அதிகாரி பதவியிலிருந்து சஞ்சீவ் சதுர்வேதி நீக்கப்பட்டார். விசாரணையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு நட்டாவின் நெருக் குதலே காரணம். எனவே இதுதொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலை யில் சுகாதார அமைச்சர் பதவி யிலிருந்து நட்டாவை நீக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்