மத்தியில் இருப்பது ஆர்எஸ்எஸ் அரசு: பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு

By பிடிஐ

“மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசும் கூட” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார். ஹைதராபாத் நகரில், மார்க்சிஸ்ட் கட்சியின் தெலங்கானா மாநில மாநாட்டில் பிரகாஷ் காரத் நேற்று பேசியதாவது:

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்துள்ளது. உண்மையில் இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசும் கூட. இந்துத்துவா கொள்கையை முன்னெடுத்துச் செல்ல இதுவே சரியான நேரம் என்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது. இதனால்தான் நாட்டில் சிறுபான்மையினரை இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சிகளை (கர்வாப்ஸி) காண்கிறோம்.

சிறுபான்மையினரை தனிமைப்படுத்துவதற்கான திட்டமிட்ட முயற்சிகளையும் பார்க்கிறோம். வலதுசாரி இந்துத்துவா சக்திகளால் எண்ணங்களை வெளிப்படுத்தும் உரிமை, கலை, கலாச்சார உரிமைகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

மோடியின் அரசு ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளை கொண்டுள்ளது. எதேச்சதிகார மத்திய அரசு மற்றும் இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டியது அவசியம். இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்