கேரள சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக, இடது ஜனநாயக முன்னணியைச் (எல்டிஎப்) சேர்ந்த எம்எல்ஏக்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசா ரணையை தொடங்கி உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கேரள சட்டப்பேரவையில் மாநில நிதியமைச்சர் கே.எம்.மாணி பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மதுபான பார்களுக்கு அனுமதி வழங்கியதில் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணி பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என வலியுறுத்தி எல்டிஎப் எம்எல்ஏக்கள் இருக்கைகளை தூக்கி வீசியும், மைக் மற்றும் கணினிகளை தூக்கி வீசியும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டப்பேரவைக்கு வெளியிலும் வன்முறை வெடித்தது.
இந்த அமளி தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் போலீஸில் புகார் செய்துள்ளார். அதில் அவையில் உள்ள ரூ.5 லட்சம் மதிப்பிலான சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பேரில், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சிலர் மீது பொது சொத்துகள் சேத தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் 447 (குற்ற எல்லை மீறல்) மற்றும் 427 (சேதம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு
கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேற்று கூறும்போது, “அவையில் நடைபெற்ற சம்பவம் குறித்து எதிர்க்கட்சியினர்தான் ஆளுநர் பி.சதாசிவத்தை சந்தித்து புகார் தெரிவித்தனர். பட்ஜெட் நடவடிக்கையில் தலையிட முடியாது என ஆளுநர் கூறியுள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.
ஆட்சியில் தொடரக்கூடாது
அவையில் நடைபெற்ற சம்பவம் அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக ஆளுநர் கூறியுள்ள நிலையில், ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியில் தொடர்வதற்கான தகுதியை இழந்துவிட்டது என்று எதிர்க்கட்சித்தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறியுள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக கேரள ஆளுநர் பி.சதாசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகத்தின் கோயிலாக விளங்கும் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடந்த சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அரசியலமைப்பு சட்டம் 356-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் அளவுக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறக்கூடாது. சட்டப்பேரவையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
50 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago