தீவிரவாதிகள் தாக்குதல்: மேகாலயாவில் 4 போலீஸார் பலி

By பிடிஐ

மேகாலயா மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் தடை செய்யப் பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று மறைந் திருந்து தாக்கியதில் 4 போலீஸார் பலியாயினர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

தெற்கு கரோ ஹில்ஸ் மாவட்டம் ரொங்காரா மற்றும் பாக்மரா ஆகிய பகுதிகளுக்கிடையே உள்ள வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த போலீஸார் மீது ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 4 போலீஸார் பலியாயினர். காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் இந்திய விமானப்படை ஹெலி காப்டர் உதவியுடன் சம்பவ இடத் துக்குச் சென்று பலியானவர்களின் சடலங்களையும் காயமடைந்தவர் களையும் போலீஸார் மீட்டனர்.

தடை செய்யப்பட்ட கரோ தேசிய விடுதலைப் படையைச் (ஜிஎன்எல்ஏ) சேர்ந்த 30 பேர் அடங்கிய குழு மறைந்திருந்து இந்தத் தாக்குதலை நடத்தி யிருக்கலாம் என சந்தேகிக் கிறோம்.

எல்லை பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் வனப் பகுதிக்குள் தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேகாலயா காவல் துறை டிஜிபி ராஜீவ் மேத்தாவும் சம்பவ இடத் துக்கு சென்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்