கே.ஜி.டி-6 பகுதியில் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மத்திய தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கைக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுப்பதில் முறைகேடுகள் உட்பட பல்வேறு முறைகேடுகளை சிஏஜி-யின் இறுதி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வழக்கு தற்போது மே மாதம் 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. கடந்த ஜனவரி 6-ம் தேதி இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் தங்கள் பதில்களை 6 வாரத்துக்குள் அளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.
கேஜி டி-6 பகுதியில் எண்ணெய் எடுக்கும் பணியில் கிணறு தோண்டுதல், ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுத்தல் ஆகிய செலவினங்கள் உட்பட சுமார் ரூ.2179 கோடி செலவு செய்துள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் கோரியுள்ளது. இந்த தொகையை அளிக்கக் கூடாது, இதனை அனுமதிக்கக் கூடாது என்று மத்திய தலைமைத் தணிக்கைக் குழு கோரியிருந்தது.
இதற்கு ரிலையன்ஸ் அளிக்கும் பதிலையே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், டி.எஸ்.தாக்கூர், குரியன் ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு ஆய்வு செய்யும்.
ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக ஆஜரான வழக்கறிஞர் சால்வே, சி.ஏ.ஜி. அறிக்கைக்கு பதில் அளிக்க கூடுதலாக 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் கேட்டிருந்தார்.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கட்டணத்தை உயர்த்திக் கொடுக்கும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குருதாஸ் தாஸ்குப்தா மற்றும் காமன் காஸ் என்ற என்.ஜி.ஓ. அமைப்பு செய்திருந்த மனுவின் மீதான விசாரணையில் இன்றைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago