முலாயம் சிங்குக்கு பன்றிக் காய்ச்சல்? - மருத்துவமனையில் அனுமதி

By பிடிஐ

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படு கிறது.

முலாயம் சிங்குக்கு நேற்று முன்தினம் இரவு (75) மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்து வர்கள், 'அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆனால், பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பு எங்களால் எதையும் உறுதி யாகச் சொல்ல முடியாது' என்று கூறினர்.

இதற்கிடையே, லக்னோவில் சமாஜ்வாதி கட்சித் தொண்டர்களிடையே பேசிய அக்கட்சி செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி, 'மருத்துவர்கள் அவரை மூன்று நாள் ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். அவரின் உடல்நலம் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை' என்றார்.

முன்னதாக, கடந்த வாரம் ஒரு இரவில் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முலாயம் சிங் அனுமதிக்கப்பட்டார். சில பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்ட பின்னர் அவர் வீடு திரும்பினார். மருத்துவர்களின் அறிவு ரையை ஏற்று, ஹோலி பண்டிகையின்போது, சொந்த கிராமமான சைஃபைக்கு முலாயம் சிங் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்