நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் அவைக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஹைதராபாதில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வரவேற்கிறோம். நாட்டின் நலனை கருத்திற் கொண்டு அனைத்து கட்சிகளும் சட்ட மசோதாவை ஆதரிக்க வேண்டும். பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில் சமரச தீர்வு ஏற்படும் என்று நம்புகிறேன்.
நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா உட்பட 6 அவசர சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஏலத்தில் மத்திய அரசு வெளிப் படையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது. இதுவரை 18 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ரூ. ஒரு லட்சம் கோடி கிடைத்துள்ளது. மேலும் 204 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கொள்கை மாற்றமில்லை
பின்னர் ‘‘காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்ற பாஜக.வின் கொள்கை விட்டுக் கொடுக்கப்பட்டதா?’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற பாஜக.வின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த கொள்கையை எதிர்காலத்திலும் மாற்றிக் கொள்ள மாட்டோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago