மத்திய தகவல் ஆணையத்தின் ஆண்டறிக்கை நேற்று வெளியிடப் பட்டது. அதில் 2013-14ம் ஆண்டில் ஆர்.டி.ஐ.சட்டத்தின் கீழ் விண்ணப் பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அதிகளவில் நிராகரித்த அரசு அமைப்புகளின் பட்டியல் வெளியா கியிருந்தது.
அந்தப் பட்டியலில் முதலிடத்தில் மத்திய நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் உள்ளது. இது சென்ற ஆண்டில் 28.85 சதவீத விண்ணப்பங்களை நிராகரித் துள்ளது.
அதற்கடுத்த இடத்தில் பிரதமர் அலுவலகமும் (20.49 சதவீதம்), நிதி அமைச்சகமும் (19.16 சதவீதம்) உள்ளன. இவற்றைத் தொடர்ந்து மத்திய மின்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், அமைச் சரவை செயலகம், பணியாளர் அமைச்சகம், பாதுகாப்புத்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவர் செயலகம், வீட்டுவசதி அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஆகியவை இடம்பிடித்துள்ளன.
தவிர, ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் உள்ள 8,9,11 மற்றும் 24 ஆகிய பிரிவுகளின் படிதான், எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்க வேண்டும். ஆனால் இந்தப் பிரிவுகள் அல்லாமல் வேறு காரணங்களைக் கூறி விண்ணப்பங்கள் நிராகரிக் கப்படுவதாகவும் அந்த ஆண்டறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 44 சதவீதமாக உள்ளன. இதனால் அதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
இந்தியா
4 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago