ஓடுபாதையை விட்டு விலகியது விமானம்: கர்நாடக அமைச்சர், நீதிபதிகள் உட்பட 77 பேர் உயிர்தப்பினர்

By இரா.வினோத்

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையை விட்டு விலகியது. இதில் பயண‌ம் செய்த அம்மாநில அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் உட்பட 77 பேர் உயிர் தப்பினர்.

பெங்களூருவில் இருந்து நேற்று முன் தினம் இரவு 8 மணி யளவில் ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜி 1085 ஹூப்பள்ளிக்கு பறந்தது. இதில் கர்நாடக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரோஷன் பெய்க், சட்டப்பேரவை மேலவை உறுப் பினர் மஹந்தேஷ் கவடக்நாத், கர்நாடக உயர் நீதிமன்ற நீதி பதிகள் பி.எஸ்.பாட்டீல், மனோகர், ரத்னம்மா உட்பட 77 பேர் பயணம் செய்தனர்.

ஹூப்பள்ளி விமான நிலை யத்தை நெருங்கிய போது அங்கு பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. எனவே விமானி சஞ்சய் சக்சேனா, `மோசமான வானிலையின் காரணமாக 20 நிமிடங்கள் தாமதமாக தரை யிறங்கும்' என அறிவித்தார்.

இதனிடையே அடுத்த சில நொடிகளில் விமானம் ஓடு பாதையில் இருந்து விலகி பயங்கர சத்தத்துடன் சமதளம‌ற்ற பகுதியில் தரையிறங்கியது. இதனால், விமானத்தின் அடிப்பாகம் மற்றும் டயர்கள் பலத்த சேதம் அடைந்தன. இதனையடுத்து அவசர கால கதவு திறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர்.

இது தொடர்பாக கர்நாடக அமைச்சர் ரோஷன் பெய்க்,''விமானம் திடீ ரென கீழே சரிந்து, தரையில் வேகமாக பயங்கர சத்தத் துடன் மோதிய போது அதிர்ச்சி அடைந்தேன். விமானியின் திறமையாலும் சாதுர்யமான அணுகுமுறையாலும் 77 பயணி களும் உயிர் தப்பினோம்.பயணி கள் யாருக்கும் காயம் இல்லை. விமானி மற்றும் ஊழியர்களுக்கு நன்றி கூறினேன்''என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்