பாதிக்கப்பட்டவர்கள் 28,441: பன்றிக் காய்ச்சலில் இதுவரை 1,627 பேர் பலி

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,627 ஆக அதிகரித் துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘ஹெச்1என்1’ எனும் வைரஸால் பரவும் பன்றிக் காய்ச்சல் பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை என மத்திய அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 13 வரையிலான புள்ளி விவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

இதன்படி, இதுவரை நாடு முழுவதும் 28,441 பேர் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நோய்க்கு நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை மேலும் 40 ஆக அதிகரித்து, 1,627 ஆகி உள்ளது.

இதில் மிக அதிக அளவாக குஜராத்தில் 5,969 பேர் பாதிக்கப்பட்டு, 368 பேர் பலியாகி உள்ளனர். அடுத்தபடியாக, ராஜஸ்தானில் 6,124 பேர் பாதிக்கப்பட்டு, 367 பேர் பலியாகி உள்ளனர். மகராஷ்டிராவில் பலி 264, பாதிக்கப்பட்டவர்கள் 3,135. மத்தியப் பிரதேச மாநிலத்தில் பலி 221, பாதிப்பு 1,774. டெல்லி யில் கர்ப்பிணி உட்பட 11 பேர் பலியாகி உள்ளனர். 3,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பன்றிக் காய்ச்சல் காரணமாக பஞ்சாபில் 51, தெலங்கானாவில் 69, ஹரியாணாவில் 44, உத்தரப் பிரதேசத்தில் 35, மேற்கு வங்கத்தில் 18, கர்நாடகாவில் 65 மற்றும் காஷ்மீரில் 10 பேரும் பலியாகி உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழகத்தில் 319 பேர் பாதிக்கப் பட்ட நிலையில் 11 பேர் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

46 secs ago

இந்தியா

27 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்