பிஹாரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி: ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரவு

By அமர்நாத் திவாரி

பிஹார் சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றிபெற்றது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளித்தனர். வாக்கெடுப் பின்போது எதிர்க்கட்சியான பாஜக வெளிநடப்பு செய்தது.

“முதல்வர் நிதிஷ் குமார் தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 140 பேர் வாக்களித்தனர். எதிர்த்து யாரும் வாக்களிக்கவில்லை” என்று பேரவைத் தலைவர் உதய் நாராயண் சவுத்ரி தெரிவித்தார்.

நம்பிக்கை தீர்மானத்துக்கு முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதை கைவிட்டு, ஆதரிப்போர், எதிர்ப்போர் என பிரித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியை தவிர ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் 109 பேர், ஆர்ஜேடி உறுப்பினர்கள் 24 பேர், காங்கிரஸ் கட்சியின் 5 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு உறுப்பினர், சுயேச்சை ஒருவர் என 140 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எதிலும் சாராத உறுப்பினருக்கு கொறடா உத்தரவு எப்படி பொருந்தும் என கேட்டுவிட்டு அவையிலிருந்து வெளியேறினார் மாஞ்சி. இதையடுத்து மாஞ்சியை தவிர, ஆளும் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். கட்சிக் கொறடா உத்தரவை மீறினால் பதவி பறிபோகும் என அஞ்சி இவர்கள் அரசுக்கு ஆதரவளித்தனர்.

87 உறுப்பினர்கள் கொண்ட பாஜக, வாக்கெடுப்புக்கு முன்னதாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. மொத்தம் 243 உறுப்பினர்கள் கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் 10 இடம் காலியாக இருப்பதால், பேரவையின் பலம் தற்போது 233 ஆக உள்ளது.

பிஹார் சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் கேசரிநாத் திரிபாதி தொடக்கவுரை நிகழ்த்திய பின், 4 மணி நேர விவாதத்துக்குப் பிறகு நம்பிக்கை தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. உணவு இடைவெளி இல்லாமல் விவாதம் நடந்தது. முதல்வரின் உரைக்குப் பிறகு வாக்கெடுப்புக்கு அவைத்தலைவர் உத்தரவிட்டார்.

சட்டப்பேரவை ஐக்கிய ஜனதா தளம் தலைவர் விஜய் சவுத்ரி கூறும்போது, “பல எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக உள்ளதாக பாஜக கூறியது பொய் என்பதை இந்த வெற்றி அம்பலப்படுத்திவிட்டது. நிதிஷ் குமார் அரசுக்கு ஐக்கிய ஜனதாதளம், ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் சுயேச்சை உறுப்பினர் ஆதரவாக இருப்பது தெளிவாகிவிட்டது” என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

மேலும்