பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆர்.கே. பச்சோரிக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று முன்ஜாமீன் வழங்கியது.
டெல்லியில் செயல்பட்டு வரும் ஐ.நா. பருவநிலை மாற்ற அமைப்பின் தலைவராக இருந்த பச்சோரி, அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இதனை அவர் மறுத்துள்ளார். அவரை கைது செய்ய டெல்லி போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
உடல் நிலை பாதிக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட பச்சோரி, சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். அவர் ஏற்கெனவே பெற்ற முன் ஜாமீன் முடிவடைந்த நிலையில் அவரது சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, போலீஸ் விசாரணைக்கு பச்சோரி சரியாக ஒத்துழைக்கவில்லை. எனவே, அவருக்கு மீண்டும் முன் ஜாமீன் வழங்க கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
எனினும் பச்சோரிக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அவருக்கு ஏற்கெனவே விதித்திருந்த நிபந்தனைகள் ஏதும் தளர்த்தப்படவில்லை என குறிப்பிட்ட நீதிபதி, போலீஸ் விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
2007-ம் ஆண்டு பச்சோரி குழுவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்க துணை அதிபராக இருந்த அல் கோருடன் பச்சோரி இணைந்து இந்த விருதை பெற்றார்
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago