உத்தரப் பிரதேசத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்து கோயில் கட்டிய கிராம தலைவருக்கு (முஸ்லிம்) பாராட்டு விழா நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்துக்களுக்காக முஸ்லிம் ஒருவர் கோயில் கட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும்” என்றார்.
மதுரா நகருக்கு அருகே உள்ள சஹார் கிராமத்தில் கோயில் இல்லாததால், அந்த கிராம இந்துக் கள் 4 கி.மீ. தூரத்தில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தனர். இதையடுத்து, தனது சொந்தப் பணத்தில் (ரூ.4 லட்சம்) சிவன் கோயில் கட்டிக்கொடுத்துள் ளார் அந்த கிராம தலைவர் அஜ்மல் அலி ஷேக். கடந்த சில தினங் களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக அஜ்மல் அலி ஷேக் செய்தியாளர்களிடம் கூறும் போது, “கிராமத்தில் மத நல்லிணக் கத்தை வலியுறுத்தும் வகையிலும், பெண்கள் எங்கள் கிராமத்திலேயே வழிபடுவதற்கு வசதியாகவும் கோயில் கட்டினேன். இதற்காக முதல்வர் எனக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளார். அதை வரவேற்கிறேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago