திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் நேற்று அதிகாலை செம்மரக் கடத்தல் கும்பல், வனத் துறையினர் மீது கற்கள், கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி யது. இதனை தொடர்ந்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி ரூ.2 கோடி மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.
நேற்று அதிகாலை ரேணிகுண்டா அருகே உள்ள கிருஷ்ணாபுரம் வனப் பகுதியில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வனத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத் துறையினரும் போலீஸாரும் அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த சுமார் 30 பேர், இவர்கள் மீது கற்கள் மற்றும் கோடாரிகளால் சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.
இதை சமாளிக்க, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவரை மட்டும் போலீஸார் பிடித்தனர். மேலும் இவர்கள் தயாராக வெட்டி வைத்திருந்த 180 செம்மரங்களை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
50 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago