மாநிலங்களவைக் கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக புதிய அவசரச் சட்டத்தை பிறப்பிக்க மத்திய அரசு சூழ்ச்சி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இப்போதைய நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டம் ஏப்ரல் 6-ம் தேதி காலாவதியாகிறது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை.
எனவே அந்த அவையின் பட்ஜெட் கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து புதிய அவசரச் சட்டம் பிறப்பிக்க சதி செய்கிறது பாஜக அரசு.
உத்தேச புதிய மசோதாவில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற விவரம் எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை. இதுபற்றிய விவரம் தெரிந்தால்தான் எங்கள் தரப்பு நிலையை தெரிவிக்க இயலும்.
இந்த மசோதாவை தற்போதைய வடிவில் ஆதரிக்க முடியாது. இதை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். எங்கள் கட்சி தரப்பில் தெரிவிக்கப்படும் சந்தேகங்கள், அச்சங்களுக்கு தீர்வு காணும் வகையில் திருத்தங்களை செய்தால் மட்டுமே ஆதரிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago