தெலங்கானா மாநிலத்தில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை: மருத்துவ செலவு இலவசம்; இதர செலவுகளை அரசு ஏற்றது

By என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநிலத்தில் ஏழைப் பெற்றோருக்குத் தலை ஒட்டி பிறந்த இரட்டை பெண் குழந்தைகளான வீணா, வாணி இருவரையும் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க லண்டன் மருத்துவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியைச் சேர்ந்த முரளி, நாகலட்சுமி தம்பதிக்குக் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் இரு பெண் குழந்தைகள் தலை ஒட்டி பிறந்தனர். இக்குழந்தைகளுக்கு வீணா-வாணி எனப் பெயர் சூட்டப்பட்டது.

தலை ஒட்டியும் பிற பாகங்கள் தனியாகவும் உள்ளன. ஹைதராபாத்தில் உள்ள நிலோஃபர் மருத்துவமனையில் இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு மருத்துவ நிபுணர்கள் இக்குழந்தைகளைப் பிரிக்க மருத்துவ ரீதியான சாத்தியக்கூறுகளை ஆய்ந்து வந்தனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னர், லண்டன் டுநாவே பகுதியில் உள்ள `கோஷ்’ மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர். டேவிட் ஜேம்ஸ் மற்றும் நூர் உல் ஓவஸ் டானியல் ஆகிய இருவரும் ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வரும் வீணா-வாணி ஆகிய இருவரையும் பார்த்துச் சில மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

“அண்மையில் இதுபோன்ற இரட்டையர்களை நவீன அறுவை சிகிச்சை மூலம் பிரித்ததாகவும், அவர்கள் தற்போது நலமாக இருப்பதாகவும்” தெரிவித்த அந்த டாக்டர்கள், வீணா-வாணி ஆகிய இருவரையும் அதேபோன்ற அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறும் போது, “இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற 80 சதவீத வாய்ப்பு உள்ளது. இந்த அறுவை சிகிச்சை 5 கட்டங்களாக நடத்தப்படும். 50 முதல் 100 மருத்துவக் குழுவினர் இதில் பங்கேற்பர். சுமார் 9 முதல் 12 மாதங்கள் வரை இந்தக் குழந்தைகளுடன் யாராவது ஒருவர் தங்க வேண்டும்” என்றனர்.

அறுவை சிகிச்சைக்குக் கோடிக்கணக்கில் பணம் தேவைப் படும் என்பதால் வீணா, வாணி ஆகியோரின் பெற்றோர் கவலை யடைந்தனர். இதுதொடர்பாகத் தகவலறிந்த தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், மருத்துவச் செலவை அரசு ஏற்கும் என அறிவித்தார்.

இந்நிலையில், அறுவை சிகிச்சையைக் கட்டணமின்றிச் செய்ய லண்டன் மருத்துவர்கள் முன்வந்தனர். ஆனால் இந்தக் குழந்தைகளுடன் வருபவர்கள் ஓராண்டு தங்குவது, உணவு, போக்குவரத்து செலவுகளைப் பெற்றோரே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டது. ஆனால் ஏழைப் பெற்றோரால் அதற்கு வழியில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தச் செலவு களைத் தெலங்கானா அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதனால், அக்குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்