கேரள மாநில சட்டப்பேரவை தலைவர் ஜி.கார்த்திகேயன் (66) நேற்று காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.கார்த்திகேயன், கேரள சட்டப் பேரவை தலைவராக பதவி வகித்து வந்தார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், கடைசியாக ஜனவரி 31-ம் தேதி நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கடந்த பிப்ரவரி 19-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட கார்த்திகேயன், பெங்களூருவில் உள்ள ஹெச்.சி.ஜி. புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைமை மருத்துவர் பி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான 6 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10.35 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
கார்த்திகேயனின் உடல் நேற்று மாலை விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கார்த்திகேயனின் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago