அரசு ஊழியர்கள் அலுவலக தொடர்புக்கு தனியார் மின்னஞ்சல் பயன்படுத்த தடை: மின்னணு, ஐடி துறையின் கொள்கை வெளியீடு

By பிடிஐ

அரசு ஊழியர்கள் அலுவலக ரீதியிலான கடிதத் தொடர்புகளுக் காக தனியார் மின்னஞ்சல் (இ-மெயில்) சேவையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் (ஐடி) துறையின் சார்பில், தகவல் தொழில்நுட்ப வளத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட கொள்கையில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

அரசு அலுவலக வலையமைப்பிலிருந்து தனியார் மின்னஞ்சல் சர்வர்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அலுவல் ரீதியிலான கடித தொடர்புகளுக்கு, அரசால் அங்கீகாரம் பெற்ற மற்றும் செயல்பாட்டு முகவாண்மை (என்ஐசி) அமைப்புகள் மூலம் மட்டுமே மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

அரசு அலுவல் சார்ந்த மின்னஞ்சல்களை அரசு சாரா மின்னஞ்சல் சேவை தளங்களுக்கு மேலனுப்புவதற்கும் (ஃபார்வர்டு) தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கொள்கை, மத்திய அரசு வழங்கும் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தும் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.

புதிய கொள்கைப்படி அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பதவியின் பெயரிலும் குறிப்பிட்ட நபரின் பெயரிலும் என தலா 2 மின்னஞ்சல் முகவரிகள் ஒதுக்கப்படும். இதில் தனிப்பட்ட கடிதப் போக்குவரத்துக்கு தங்களது பெயரில் உள்ள முகவரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இன்டர்நெட் தகவல் களை, சில நவீன மென்பொருள்கள் மற்றும் இணையதள நிறுவனங் களின் உதவியுடன் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் ரகசியமாக வேவு பார்ப்பதாக எட்வர்டு ஸ்னோடென் புகார் கூறியிருந்தார். இதையடுத்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இந்த புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்