உச்ச நீதிமன்ற தடை காரணமாக ஸ்பெக்ட்ரம் ஏலத்தை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்தது. இந்தத் தடையை உச்ச நீதிமன்றம் நேற்று நீக்கியது.
ஸ்பெக்ட்ரம் ஏலம் கடந்த 19 நாட்களாக நடைபெற்றது. இதன்மூலம் அரசுக்கு 1.10 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால் உச்ச நீதிமன்ற தடை காரணமாக ஏலத்தை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்தது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.கே. பாண்ட் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஸ்பெக்ட்ரம் ஏலம் மீதான முந்தைய தடை உத்தரவை நீதிபதிகள் நீக்கினர். கடந்த 19 நாட்களாக நடத்தப்பட்ட ஏலத்தை இறுதி செய்ய மத்திய அரசுக்கு அனுமதி அளித்தனர்.
இதன்மூலம் ஸ்பெக்ட்ரம் ஏலம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ள சட்டபூர்வமாக அனுமதி கிடைத்துள்ளது. இந்த ஏலத் தொகையால் அரசின் நிதிப் பற்றாக்குறை குறையும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago