மத்தியப் பிரதேச ஆளுநரின் மகன் ஷைலேஷ் மரணத்துக்கான காரணத்தைப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று உத்தரப் பிரதேச மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் (86), அவரது மகன் ஷைலேஷ் யாதவ் (50), ஆளுநர் மாளிகை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஆளுநரின் சிறப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார். ஆளுநர் ராம் நரேஷ், அவரது மகன் ஷைலேஷ் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சிறப்பு அதிரடிப் படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகில், ராம் நரேஷ் யாதவுக்கு சொந்தமான இல்லத்தில் அவரது மகன் ஷைலேஷ் நேற்றுமுன்தினம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது உடலை போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பரிசோதனையில், மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்று போலீஸார் நேற்று தெரிவித்தனர். எனினும், அவரது இதயம் உட்பட உடல் உறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளன என்று மூத்த போலீஸ் கண்காணிப்பாளர் யஷாஷ்வி யாதவ் நேற்று தெரிவித்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.
இதுகுறித்து ஷைலேஷ் யாதவின் சகோதரர் கமலேஷ் யாதவ் கூறும்போது, ‘‘இது இயற்கையான மரணம்தான். பிரேதப் பரிசோதனையின் இறுதி முடிவு தெரிய வரும்போது தெளிவாகத் தெரிந்துவிடும். என் சகோதரர் மரணத்தில் சதி வேலை இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கவில்லை’’ என்றார்.
இதற்கிடையில், மூச்சுத்திணறல் காரணமாக போபால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், மகனின் இறுதிச் சடங்கில் பங் கேற்க ஆம்புலன்ஸ் மூலம் நேற்று லக்னோ வந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago