சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலியல் பலாத்கார குற்றவாளியை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த போது மத்தியப் படைகள் தடுக்கத் தவறியதாக அசாம் முதல்வர் தருண் கோகய் தெரிவித்துள்ளார்.
நாகாலாந்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவரை வெளியே இழுத்து வந்து பொதுமக்கள் அடித்தே கொன்று அங்குள்ள மணிக் கூண்டில் மாட்டினர். இந்தச் சம்பவம் நிகழ்ந்த திமாப்பூரில் பதற்றமான சூழல் நிலவியது.
இந்நிலையில் இது குறித்த சர்ச்சை பலதரப்பிலும் நடைபெற்று வரும் சூழலில் அசாம் முதல்வர் கூறியதாவது, “சிறையில் இருந்த காவல்படையினர் மத்தியக் காவல்படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இந்தக் கொலையை தடுக்கத் தவறினர். எனவே சிறைக்கைதிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் மத்திய அரசின் பொறுப்பே.
இதன் தொடர்பாக காவல்துறை உதவி ஆணையர், மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை நாகாலாந்து அரசு இடைநீக்கம் செய்திருப்பதே நிர்வாக மட்டத்தில் அலட்சியம் இருந்ததை ஒப்புக் கொண்ட செயலாக உள்ளது.” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago