‘‘காஷ்மீரில் விடுவிக்கப்பட்ட பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலமை, மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது’’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.
காஷ்மீரில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சி உருவானது. மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் முப்தி முகமது சயீது, காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்றார். அதன்பின், சில நாட்களிலேயே பிரிவினைவாத அமைப்பின் தலைவர் மஸ்ரத் ஆலமை அரசு விடுவித்தது. இதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மாநில அரசுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக.வின் ஒப்புதலோடுதான், ஆலம் விடுவிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டின.
இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நாடாளு மன்றத்தில் விளக்கம் அளித்தனர். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். நாட்டை விட மாநிலத் தில் கூட்டணி ஒன்றும் முக்கிய மல்ல என்று அவர்கள் திட்ட வட்டமாகக் கூறினர். எனினும், எதிர்க்கட்சியினர் சமாதானம் அடையவில்லை. நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தின் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் தாமாக முன்வந்து அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கூறியதாவது:
பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் மீதுள்ள 27 கிரிமினல் வழக்குகளை தீவிரமாக நடத்த வேண்டும் என்றும் அவருக்கு எல்லா வழக்குகளிலும் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மத்திய அரசு அறிவுறுத்தியது. மேலும், நாட்டின் பாதுகாப்புக்கு குறிப்பாக காஷ்மீரின் பாதுகாப்பை உறுதிப் படுத்த ஆலமின் நடவடிக்கைகள், அவரது ஆதரவாளர்களின் நட வடிக்கைகளை கண்காணிக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசுக்கு காஷ்மீர் அரசு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், ‘விடுவிக்கப்பட்ட மஸ்ரத் ஆலமை தொடர்ந்து கண்காணிக்கிறோம். அவர் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடு படுவது தெரிய வந்தால், உடனடி யாக நடவடிக்கை எடுப்போம்’ என்று காஷ்மீர் அரசு தெரி வித்துள்ளது.
மேலும், மஸ்ரத் ஆலமை கண்காணிக்க உளவுத் துறை யினர், போலீஸார் ஆகியோர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், அமைதி நீடிக்க வும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று காஷ்மீர் அரசு கூறியுள்ளது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago