ஆதார் அட்டை இல்லாததால் எந்த வொரு குடிமகனுக்கும் அரசின் சலுகைகள், மானியங்கள், சமூக நலத்திட்டங்கள் மறுக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பான மனு உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வரர் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, சி.நாகப்பன் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்களில் ஒருவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் கூறும்போது, “நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தும், சில அரசுத் துறைகளில் ஆதார் கட்டாயம் என்கின்றனர். குத்தகை ஒப்பந்தம், திருமணப் பதிவுக்குக் கூட ஆதார் கட்டாயம் என கேட்கின்றனர். இது மிகவும் தீவிரமான பிரச்சினை” என்றார்.
அப்போது, “இதுபோன்ற சம்பவங்கள் எங்கள் கவனத்துக்கும் வந்துள்ளன” எனக் கூறிய நீதிபதிகள், சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரிடம், நீதிமன்றம் ஏற்கெனவே இதுதொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவு பின்பற்றப்பட வேண்டும். மேலும், இதுதொடர் பாக சொலிசிட்டர் ஜெனரலுக்கு எவ்வித விலக்கும் அளிக்க முடியாது” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதற்குப் பதிலளித்த ரஞ்சித் குமார், இதுதொடர்பாக மத்திய அரசு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. மாவட்ட ஆட்சியர் போன்ற அனைத்து அதிகாரிகளும் இந்த உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என மாநில அரசுகளை கேட்டுக் கொள் ளப்படும் என்றார்.
முன்னதாக, அரசின் எந்த வொரு சலுகை, மானியத்தைப் பெறவும் ஆதார் அவசியமில்லை. ஆதார் எண் இல்லை என்ற காரணத்துக்காக எந்தவொரு நபரும் பாதிக்கப்படக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நேற்று மீண்டும் உறுதி செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago