காங்கிரஸ் கட்சியின் 5 மாநிலத் தலைவர்கள் நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். அடுத்த மாதம் நடை பெறவுள்ள அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக கொண்டுவருவதற்கான முயற்சி யாக இது கருதப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநிலத் தலைவராக அஜய் மாக்கன், மகாராஷ்டிர தலைவராக அசோக் சவாண், ஜம்மு-காஷ்மீரில் குலாம் அகமது மிர், குஜராத்தில் பாரத்சிங் சோலங்கி, தெலங்கானாவில் உத்தம் ரெட்டி ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் நிருபம் மும்பை மண்டல காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநில செயல் தலைவராக எம்.எல்.ஏ. மல்லு பாதி விக்ரமார்க்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
ராகுல் காந்தி, கட்சிப் பணி யிலிருந்து சில வாரங்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டி ருக்கும் நிலையிலும், பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுபெறவுள்ள சூழலிலும் காங்கிரஸ் மேலிடம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து ராகுல் மிக விரைவில் கட்சிப் பணிக்குத் திரும்புவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்வி, தெலங்கானா தலைவர் பொன்னால லட்சுமையா, மகாராஷ்டிர தலைவர் மாணிக்ராவ் தாக்ரே, ஜம்மு-காஷ்மீர் தலைவர் சைபுதீன் சோஸ், குஜராத் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். பஞ்சாபிலும் விரைவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago