ஜாட் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

By பிடிஐ

'இட ஒதுக்கீட்டுக்கு சாதி ஒரு முக்கியமான அளவீடு என்றாலும் பிற்படுத்தப்பட்ட சாதி என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு இட ஒதுக்கீட்டை நிர்ணயிப்பது சரியல்ல. அரசியல் ரீதியாக வலுவாக உள்ள 'ஜாட்' இனத்தவருக்கு இட ஒதுக்கீடு அவசியமில்லை' என்றது உச்ச நீதிமன்றம்.

'ஜாட்' இனத்தவருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், ஜாட் இனத்தவர் அதிகமாக வசிக்கின்றனர்.

இந்நிலையில், 'ஜாட்' இனத்தவரை, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், "இட ஒதுக்கீட்டுக்கு சாதி ஒரு முக்கியமான அளவீடு என்றாலும் பிற்படுத்தப்பட்ட சாதி என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு இட ஒதுக்கீட்டை நிர்ணயிப்பது சரியல்ல. அரசியல் ரீதியாக வலுவாக உள்ள ஜாட் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு அவசியமில்லை.

எனவே 'ஜாட்' இனத்தவரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ஏற்பதற்கில்லை.

அரசியல் ரீதியாக பலம் பொருந்திய 'ஜாட்' இனத்தவருக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில் மேலும் சலுகைகள் அளிப்பது இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நல்லதல்ல.

முந்தைய காலகட்டத்தில், 'ஜாட்' இனத்தவரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது தவறு. அதே தவறை மீண்டும் தொடர முடியாது" என தெரிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்