நாகாலாந்து சிறையில் கொலை: அறிக்கை கேட்கிறது மத்திய அரசு - ஆட்சியர், எஸ்.பி. இடைநீக்கம்

By செய்திப்பிரிவு

நாகாலாந்தில் பலாத்கார குற்ற வாளியை பொதுமக்கள் அடித்து கொன்றது குறித்து அறிக்கை அளிக்குமாறு நாகாலாந்து அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும் போது, “சிறைக்குள் கும்பல் எவ் வாறு நுழைந்தது? சிறைக் கைதியை அவர்கள் எப்படி இழுத்துவர முடிந்தது என்பது குறித்து விளக்கம் தரும்படி கேட்டுள்ளோம்” என்றார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் போது, “இதுகுறித்து மூத்த அதிகாரிகளுடன் விவாதித் தேன். தேவையான நடவடிக்கை களும் எடுக்க உத்தரவிட் டுள்ளேன்” என்றார்.

இதனிடையே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்குமாறு அசாம் அரசை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாகாலாந்து எல்லையை யொட்டி தங்கள் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்து மாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நாகாலாந்து முதல்வர் டி.ஆர்.ஜிலியாங் அசாம் முதல்வர் தருண் கோகோயை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், திமாப்பூர் மத்திய சிறையை உடைத்து விசாரணை கைதியை கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது என்று தருண் கோகோயிடம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக திமாப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பா ளர், சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்