வினாத்தாள் வெளியானதால், நேற்று நடைபெற்ற உ.பி. பிராந்திய சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பிராந்திய சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான வினாத்தாள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு தொடங்குவதற்கு சற்றுமுன் வெளியானது. இதனையடுத்து அத்தேர்வை ரத்து செய்ய முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளதாக அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கவிருந்த நிலையில் 9.15 மணிக்கு ‘வாட்ஸ்-அப்’பில் வினாத்தாள் வெளியானது. எனினும் தேர்வு திட்டமிட்டபடி இருவேளைகளும் நடந்து முடிந்தது.
காவல்துறை இயக்குநர் ஏ.கே.ஜெயின் கூறும்போது, “முறைகேடு குறித்து விசாரணை நடக்கிறது” என்றார்.
முதல்நிலைத் தேர்வை நேற்று உ.பி. முழுவதும் 917 மையங்களில் 4.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், உ.பி. அரசுப் பணிகள் தேர்வாணைய தலைவர் அனில் யாதவை பதவி நீக்கவேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago