தெலங்கானா பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த சனிக்கிழமை தொடங் கியது. இதில் ஆளுநர் உரை யின் போது தேசிய கீதத்தை அவ மதித்ததற்கும், நேற்று பேரவைத் தலைவரை முற்றுகையிட்டதற்காக வும் தெலுங்கு தேசம் எம்எல்ஏ.க்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப் பட்டனர்.
தெலங்கானா பட்ஜெட் தொடரின் முதல்நாளில் ஆளுநர் நரசிம்மன் உரையாற்றினார். இந்த உரை ஆளும் கட்சியினரின் கையேடு போல் உள்ளதாக கூறி, தேசிய கீதம் பாடிய போது எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந் நிலையில் நேற்று 2-வது நாளாக பேரவை கூடியது. அப்போது, பிற் படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு சட்டப்பேரவை யில் ஆளும் கட்சி இடம் தராதது குறித்து தெலுங்கு தேசம் கட்சியி னர் கேள்வி எழுப்பினர். பின்னர் பேரவைத் தலைவரை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் எர்ரபல்லி தயாகர்ராவ், ரேவந்த் ரெட்டி, ஏ. காந்தி, எம். கோபிநாத், கிருஷ்ணா ராவ், பிரகாஷ் கவுட், ராஜேந்தர் ரெட்டி, எஸ். வெங்கட வீரய்யா, விவேகானந்தா, சாயண்ணா ஆகிய 10 பேரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய் வதாக பேரவைத் தலைவர் மதுசூதனாச்சாரி அறிவித்தார்.
இதனை தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவை யின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மறுபரி சீலனை செய்யும்படி காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் பேரவைத் தலைவரிடம் முறையிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
இந்தியா
14 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
30 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago