“ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலமை விடுதலை செய்யும் முடிவு அம்மாநிலம் ஆளுநர் ஆட்சியின் கீழ் இருந்தபோது எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆலம் விடுதலையை மத்திய அரசு தடுத்திருக்க முடியும்” என்று மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா குறிப்பிட்டார்.
மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் இந்த விவகாரத்தை எழுப்பி அவர் பேதும்போது, “நீதிமன்ற உத்தரவின்படி மஸ்ரத் ஆலமுக்கு எதிரான தடுப்புக் காவல் காலாவதியாவதால், அவரை தொடர்ந்து சிறையில் வைக்க புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மாநில உள்துறை செயலாளருக்கு மாவட்ட ஆணையர் தகவல் அளித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் ஆலமை விடுதலை செய்யு மாறு தொடர்புடைய எஸ்.பி.யிடம் மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டதுடன், அதுபற்றி உள்துறையிடம் தகவல் தெரிவித் துள்ளனர். ஆளுநர் ஆட்சியின் கீழ் அம்மாநிலம் இருந்தபோது இந்த சம்பங்கள் நடந்துள்ளன. எனவே புதிய உத்தரவு பிறப்பிக்கப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்தியிருக்கலாம்.
தடுப்புக்காவல் காலாவதி யாவது குறித்து மத்திய அரசுக்கு தெரியாமல் இருக்கலாம். அல்லது மாநில அரசின் செயலுக்கு துணை போயிருக்கலாம். இதுபற்றி அரசு விளக்கம் அளிக்கவேண்டும்” என்றார்.
இதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பதில் அளிக்கும்போது, “இது ஒரு கடுமையான பிரச்சினை. இதை அரசியலாக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் சரியான விளக்கத்தையே அளித்துள்ளார். மாநில உள்துறையிடம் அவர் விளக்கம் கேட்டுள்ளார். விளக்கம் வந்தவுடன் அவர் புதிய அறிக்கை அளிப்பார். தேசப் பாதுகாப்பில் மத்திய அரசு சமரசம் செய்துகொள்ளாது” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago