2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 19 பேரின் வாதங்கள் அனைத்தும் பதிவு செய்து முடிக்கப்பட்டதாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் இதுவரை மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் தங்களது தரப்பு வாதங்களைப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று குசேகான் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ராஜீவ் அகர்வால், டி.பி. ரியாலிட்டி லிமிடெட் மற்றும் மிஸ்டிகல் கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் ஆகியவற்றின் பதில்கள் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 தனி நபர்கள் மற்றும் 9 நிறுவனங்கள் ஆகியவற்றின் வாதங்கள் பதிவு செய்வது முடிந்துள்ள நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி, வரும் ஏப்ரல் 6-ம் தேதி எதிர்த்தரப்பு சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago