ஆவணப்படத்துக்கு தடை விதித்தது அதிர்ச்சி அளிக்கிறது: காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியா தத் கருத்து

By பிடிஐ

நிர்பயா குறித்த ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை வெளி யிட மத்திய அரசு தடை விதித்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் பிரியா தத் கூறியிருப்பதாவது:

ஆவணப்படம் குற்றவாளியின் கருத்தை வெளிப்படுத்துவதற் கான வாய்ப்பாக பார்க்கக் கூடாது. மாறாக பலாத்காரம் செய் பவர்களின் மனநிலையை வெளிப் படுத்த வேண்டும்என்ற நோக் கத்தில்தான் இந்தப் படம் வெளி யிடப்பட்டுள்ளது. பிபிசியின் செயல் பாராட்டுக்குரியது.

பலாத்காரம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதை சமூகத் துக்கு வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டும். இந்தப் படத்துக்கு தடை விதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தப் படம் வெளியிடப்பட்ட தற்கு சமூக இணையதளங்களில் பலர் முக்கியப் பிரமுகர்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரன்வீர் ஷோரே இது குறித்து ட்விட்டரில், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்த தவறை இப்போதைய மத்திய அரசும் செய்யக்கூடாது. இந்த ஆவணப்படத்துக்கு விதிக் கப்பட்ட தடையை நீக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

எழுத்தாளர் சேத்தன் பகத் ட்விட்டரில், “தடையை மறந்து விடுங்கள். இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை ஒவ்வொரு வரும் அவசியம் பார்க்க வேண்டும். அப்போதுதான் சமூக அவலங் களைப் புரிந்துகொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்