அரசியல் முதிர்ச்சியின்மையால் ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து தவறிவிடக் கூடாது என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி உட்பூசல் காரணமாக அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வாரணாசியில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அருண் ஜேட்லி, "அரசியல் முதிர்ச்சியின்மையால் ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து தவறிவிடக் கூடாது. மக்களுக்கு சேவை செய்யும் நல்வாய்ப்பை இழந்திட வேண்டாம்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி மக்கள் வாக்களித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றிட வேண்டும்" என்றார்.
அர்விந்த் கேஜ்ரிவால் பேச்சு பதிவு செய்யப்பட்டு வெளியான விவகாரம் குறித்த கேள்விக்கு, "ஒரு அரசியல் தலைவரின் பேச்சு ரகசியமாக பதிவு செய்யப்படும் நடவடிக்கை மிகவும் கீழ்த்தரமானது. இத்தகைய நடவடிக்கைகளை நான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
34 mins ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago