கருவிலேயே கொல்லும் கொடுமையை தடுக்க பெண் குழந்தைகள் பிறக்காத பஞ்சாயத்துக்கு நிதி ரத்து: இமாச்சலப் பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங் அதிரடி

By ஐஏஎன்எஸ்

‘‘பெண் குழந்தைகள் பிறக்காத பஞ்சாயத்துகளுக்கு அரசு நிதி ஒதுக்காது’’ என்று இமாச்சலப் பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருவில் வளரும் குழந்தை பெண் என்று தெரிந்தால் அதை அழித்து விடும் வழக்கம் இன்றும் பல இடங்களில் தொடர்கிறது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஆண் - பெண் விகிதாச்சாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து வருவது முதல்வர் வீர்பத்ர சிங் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, பெண் குழந்தைகள் பிறக்காத பஞ்சாயத்துகளுக்கு அரசு நிதி ஒதுக்காது. அதேநேரத்தில் ஆண் - பெண் விகிதாச்சாரம் குறையாமல் இருக்க பெண் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கும் பஞ்சாயத்து களுக்கு பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் வீர்பத்ர சிங் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் கங்ரா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் வீர்பத்ர சிங் பங்கேற்றார். அந்த மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ள விவரம் அவரிடம் தெரிவிக்கப் பட்டது. அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த முதல்வர், இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறும்போது, ‘‘பஞ்சாப் எல்லையில் வசிக்கும் இமாச்சலப் பிரதேச மக்கள் பெண் குழந்தை களை வெறுப்பதும், அதனால் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அந்தப் பகுதிகளில் மிகக் குறை வாக இருப்பதும் முதல்வருக்குத் தெரியவந்தது. இதையடுத்து பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு அவர் கடும் உத்தரவுப் பிறப்பித் துள்ளார். மேலும், பெண் சிசுவை அழிக்க தனியார் மருத்துவமனை கள், கிளினிக்குகளுக்குச் செல்லும் பெண்களை கண்காணிக்கும்படி சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்’’ என்றனர்.

மேலும், 6 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் அதிகம் உள்ள 50 பஞ்சாயத்துகளைப் பாராட்டி பரிசு வழங்க முதல்வர் வீர்பத்ர சிங் திட்டமிட்டுள்ளார். அதன் படி, முதல் பாராட்டு நிகழ்ச்சி உனா மாவட்டத்தில் நடக்க உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 972 பெண்கள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வீர்பத்ர சிங் கூறும்போது, ‘‘பெண்கள் கல்வி பெற்றால்தான் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும். அக்கம் பக்கத்தில் பள்ளிகளே இல்லாத குக்கிராமமாக இருந்தாலும் சரி, அங்கு 10 பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்காகப் பள்ளிக் கூடம் தொடங்க நான் தயார்’’ என்றார்.

பெண் சிசுக் கொலையை ஒழிக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தசரா திருவிழாவின் போது குலுவில் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி நடத்தப் பட்டது. அப்போது, 8,700 நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து முதல்வர் வீர்பத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங், இளைய மகள் அபராஜிதா ஆகியோரும நடனமாடி மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கு தனிப்பட்ட முறை யில் பண உதவியும் செய்து வரு கிறார் முதல்வர். எல்லா பள்ளி களிலும் பெண் குழந்தைகளுக்குத் தனி கழிப்பறை கட்டுவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்