தொடர் தாக்குதல் எதிரொலி: அனைத்து தேவாலயங்களிலும் கேமரா - தீவிர கண்காணிப்பில் டெல்லி போலீஸார்

By செய்திப்பிரிவு

டெல்லியில் தேவாலயங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுவதன் எதிரொலியாக, மாநில காவல் துறையினர் அனைத்து தேவாலயங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து டெல்லி காவல் துறை அதிகாரிகள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “டெல்லியின் எந்த ஒரு தேவாலயம் மற்றும் கிறிஸ்தவப் பள்ளிகளின் மீதும் இனி தாக்குதல் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட தேவாலயங்களுக்கு அடிக்கடி திடீர் விஜயம் செய்து தீவிரமாக கண்காணிக்குமாறு துணை ஆணையர்களுக்கு காவல் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவாலயங்கள் மற்றும் கான்வென்ட் பள்ளிகள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்றனர்.

தற்போது டெல்லியில் உள்ள தேவாலயங்களில் 161-ல் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு மேலும் 54 தேவாலயங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவை அனைத்தையும் சேர்த்து மொத்தம் 240 தேவாலயங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த டெல்லி காவல் துறை முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக டெல்லி காவல் துறையின் கூடுதல் ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் அவ்வப்போது, தேவாலாயங்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய கிறிஸ்தவ பாதிரியார்களை அழைத்து பாதுகாப்பு குறித்து கேட்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக டெல்லி காவல் துறை சார்பில் ஃபேஸ்புக்கில் தனியாக ஒரு பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களில் டெல்லியில் 6 தேவாலயங்கள் மீது தாக்குதல் நடந்தது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனம் எழுந்ததுடன், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் டெல்லியின் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். அதன் பிறகும் ஒரு கிறிஸ்தவ கான்வெண்ட் பள்ளியின் மீது தாக்குதல் நடந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த பிரதமர் நரேந்தர மோடி, டெல்லி மாநில காவல் துறை ஆணையர் பி.எஸ்.பாஸியை நேரில் அழைத்து, தேவாலயங்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடந்து தேவாலயங்களின் பாதுகாப்புக்காக பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் உள்ள சுமார் 1.6 கோடி மக்கள் தொகையில், சுமார் 1.5 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள் ஆவர்.

ஹரியாணாவில் தாக்குதல்

டெல்லியை ஒட்டி அமைந்துள்ள மாநிலமான ஹரியாணாவின் ஹிசார் மாவட்டம் கைம்ரி கிராமத்தில் கட்டப்பட்டு வந்த ஒரு தேவாலயத்தின் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனுள் வைக்கப்பட்டிருந்த சிலுவையை அகற்றிவிட்டு அங்கு ஹனுமன் சிலை வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அந்த தேவாலயத்தின் பாதிரியார் சுபாஷ் சந்த், பஜ்ரங்தளம் அமைப்பைச் சேர்ந்த 14 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்தக் கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்