ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கோடியில் தெலங்கானா மாநில பட்ஜெட் தாக்கல்

By என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதி அமைச்சர் ஈடல ராஜேந்தர் நேற்று தாக்கல் செய்தார்.

2015-16 நிதியாண்டுக்கான முதல் முழுமையான பட்ஜெட் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 689 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தெலங்கானா மாநில போராட்டத்துக்காக உயிர் தியாகம் செய்த 481 தியாகிகளின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ரூ.48.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஏழைகளின் இலவச திருமண திட்டத்துக்காக ‘கல்யாணலட்சுமி’ எனும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக் கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கிக் கடனை ரத்து செய்ய 4,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் கட்டிடத் துறைக்கு ரூ.4,980 கோடி, கல்வி மேம்பாட்டுக்கு ரூ.11,216 கோடி, தாய்-சேய் நலத் துறைக்கு ரூ.771 கோடி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு ரூ.2,172 கோடி, முதியோர், விதவைகள், மாற்றுத் திறானாளிகளுக்கு மாத உதவித் தொகைக்காக ரூ.4 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின்சாரத் துறை மேம்பாட்டுக்கு ரூ.7,400 கோடியும், மருத்துவ துறைக்கு ரூ.4,932 கோடியும், தொழில் துறைக்கு ரூ.973 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை முதல்வர் கே.சந்திர சேகர் ராவ் வரவேற்றுள்ளார். மிகவும் திருப்திகரமாக உள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார். காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்