ஆம் ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக ஆம் ஆத்மி கட்சி போலியான ஆவணங்களைக் கொடுத்துள்ளது. மேலும், அதுதொடர்பான கடிதத்தில அரசு இலச்சினை இடம்பெற்றுள்ளது. இது சட்டவிரோதம். எனவே, ஆம் ஆத்மி பதிவை ரத்து செய்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மனு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோஹினி, நீதிபதி ஆர்.எஸ். எண்ட்லா ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், ‘ஆம் ஆத்மி கட்சியைப் பதிவு செய்வதில் காலதாம தமோ, அதிக அவசரமோ காட்டப் படவில்லை. முழு விதிமுறை களையும் பூர்த்தி செய்த பிறகே அக்கட்சி பதிவு செய்யப்பட்டது. இதில், எந்தவொரு விதிமீறலும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆம் ஆத்மியின் பதிவை நீக்கக் கோரும் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago