பெங்களூருவில் சோகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்ம மரணம்

By இரா.வினோத்

பெங்களூருவில் ஒரே குடும்பத்தில் அரசு ஊழியர் உட்பட 6 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளன‌ர்.

பெங்களூரு நாகரபாவி பகுதியில் உள்ள எம்.பி.எம்.லேஅவுட்டைச் சேர்ந்தவர் கங்கபைர‌ய்யா (57). விஜயநகர் பி.எஸ்.என்.எல். அலுவல கத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி ஜெயம்மா (55),3 மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.

கங்கபைரய்யாவின் மூத்த மகள் ஹேமலதா(30) ஹெச்.பி. நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகவும்,2-வ‌து மகள் விமலா (28) ரயில்வேயிலும் பணி புரிந்தனர். கல்லூரி படிப்பை முடித்துள்ள மகன் யதீஷ் (25) வேலை தேடி வந்தார். கடைசி மகள் நேத்ராவதி (23) பொறியியல் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று கங்கபைரய்யாவின் வீட்டுக்கு அவரது நண்பர் சோமராஜூ வந்துள்ளார்.அப்போது பூட்டியிருந்த வீட்டில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்குவது ஜன்னல் வழியாக தெரிந்தது.உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பூட்டை உடைத்து வீட்டை கதவைத் திறந்து பார்த்த போது கங்கபைரய்யா,அவரது மனைவி மற்றும் 3 மகள்கள் வாயில் ரத்தம் கசிந்த நிலையில் இறந்து கிடந்தனர். மகன் யதீஷ் தூக்கில் தொங்கி கொண் டிருந்தார். இதையடுத்து 6 சடலங் களையும் கைப்பற்றிய‌ போலீஸார் உடனடியாக பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நாகரபாவி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்