முஸ்லிம்கள் இடஒதுக்கீடு ரத்து சரியே: சுப்பிரமணியன் சுவாமி

By செய்திப்பிரிவு

800 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என எத்துறையிலும் இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை என பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முஸ்லிம்களுக்கு கல்வியில் வழங்கப்பட்டு வந்த 5% இடஒதுக்கீட்டை மகாராஷ்டிரா அரசு ரத்து செய்திருக்கிறது.

மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவை நான் வெகுவாக வரவேற்கிறேன். இந்திய அரசியல் சாசனத்தை தெளிவாக ஆராய்ந்தால், மத அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு அளிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்பது தெரியும்.

மேலும், முஸ்லிம்கள் இந்தியாவில் 800 ஆண்டுகள் ஆட்சி செலுத்தியுள்ளனர். 8 நூற்றாண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் தங்களை சமூகத்தில் சிறுபான்மையினராகவோ அல்லது சமூகத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாகவோ கோருவதில் நியாயமில்லை. எனவே முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் எவ்வித சலுகையும் அளிக்கக்கூடாது" என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

57 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்