வருமான வரி பாக்கியை செலுத்தாத தால் ஆந்திரா, தெலங் கானா ஆகிய இரு மாநிலங்களில் உள்ள 39 மதுபான கிடங்குகளுக்கு வருமான வரித் துறையினர் நேற்று ‘சீல்’ வைத்தனர்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநில மாக இருந்தபோது மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை. இதுவரை ரூ. 9 கோடி வரை வருமான வரி பாக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே வருமான வரி செலுத்துவதற்கு கால அவகாசம் கேட்டு இவர்கள் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றனர். கால அவகாசம் முடிவடைந்த போதும் அவர்கள் வரி பாக்கியை செலுத்தவில்லை. இதையடுத்து, தெலங்கானா (17), ஆந்திராவில் (22) உள்ள 39 மதுபான கிடங்குகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இதன் காரணமாக, இரு மாநிலங் களிலும் மதுபான விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கிடங்குகள் மூடப்பட்டதால், சரக்கு கையிருப்பு குறைந்து மதுபான விற்பனை கடைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago