டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாக கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து இருவரும் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டனர்.
இருவரையும் நீக்க கட்சியின் தேசிய செயற்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது கட்சியின் மகாராஷ்டிரா ஒருங்கிணைப்பாளர் மயாங்க் காந்தி வாக்கெடுப்பை புறக்கணித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியபோது, பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவை நீக்கியது தவறு என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக மயாங்க் காந்தி நேற்று கூறியிருப்பதாவது:
கட்சித் தலைமையின் தவறு களை திருத்தக் கோரியதால் இப்போது என்னை பழிவாங்கத் தொடங்கியுள்ளனர். ஆசிஷ் கேத் தான் தலைமையிலான குழு எனக்கு எதிராக செயல்பட்டு வருகி றது. இணையதளத்தில் எனக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. நான் கட்சியின் விரோதி என்று முத்திரை குத்தப்படுகிறேன். ஒட்டுமொத்தமாக என்னை கட்சி யில் இருந்து நீக்க சதி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago