ஆர்எஸ்எஸ் அவதூறு வழக்கு: ராகுல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

By பிடிஐ

ஆர்எஸ்எஸ் தொடுத்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டுமென்று மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு மகாராஷ்டிரத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஆர்எஸ்எஸ் உறுப்பினர்தான் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார் என்று ராகுல் காந்தி பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பு அவதூறு வழக்குத் தொடர்ந்தது.

கட்சி பணிகளில் இருந்து விடுப்புப் பெற்றுள்ள ராகுல், இப்போது எங்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் தொடுத்த அவதூறு வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த பிவாண்டி மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.பி. காலே, வரும் மே மாதம் 8-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தர விட்டார்.

முன்னதாக இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்தும், தன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று கூறியும் ராகுல் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் ஆர்எஸ்எஸ் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என்று கூறி அவரது மனுவை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக மாவட்ட நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்