இந்தியாவில் சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை என ஆர்.எஸ்.எஸ். கருத்து தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) துணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸ்போலே, "இந்தியாவில் மரபணு ரீதியாக, கலாச்சார ரீதியாக சிறுபான்மையினர் என்று எவரும் இல்லை" எனக் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ்-ஸின் உயர்நிலை அதிகார குழுவான அகில பாரதிய பிரதிநிதி சபாவின் கூட்டம் நேற்று தொடங்கியது.
இதில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் துணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸ்போலே செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்தியாவில் மரபணு ரீதியாக, கலாச்சார ரீதியாக சிறுபான்மையினர் என்று எவரும் இல்லை. சிறுபான்மயினர் என யாரை அழைக்கிறீர்கள். நாங்கள் யாரையும் சிறுபான்மையினராகக் கருதவில்லை. இந்திய தேசத்தில் சிறுபான்மையினர் என்ற கருத்தே இருக்கக் கூடாது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இதே கருத்தை 20-க்கும் மேற்பட்ட முறை வலியுறுத்தி இருக்கிறார்.
எனவே, இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்களே. இதை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும் இதுவே மறுக்க முடியாத உண்மை. கலாச்சார ரீதியாகவும், மரபணு ரீதியாகவும் அவர்கள் அனைவரும் இந்துக்களே" என்றார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும் இடம் உண்டா என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago