பணியிடத்தில் புகை, மது பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
இது கல்வி நிறுவனங்களில் பணி புரியும் ஆசிரியர்கள், நிர்வாக ரீதியான பணியில் இருப்பவர்கள், ஏனைய அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் பொருந்தும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறை, ஏற்கெனவே கேரள அரசு அலுவலகங்கலில் அமலில் இருந்தாலும், அரசு ஊழியர்கள் பலர் இதனை சரியாக பின்பற்றவில்லை என்ற புகார் எழுந்தது. இதனையடுத்து இந்த விதிமுறையை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, பணியிடத்தில் புகை, மது பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணி நேரத்தில் ஓட்டுநர்கள் புகை, மது உபயோகித்தது கண்டறியப்பட்டால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago