உண்மை வெளிச்சத்துக்கு வரும்: யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் விளக்கம்

By செய்திப்பிரிவு

ஆம் ஆத்மி உட்கட்சி பூசல் விவகாரத்தில் உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று அதிருப்தி தலைவர்கள் யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் தெரிவித்துள்ளனர்.

மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி மூத்த தலைவர்களின் கூட்டறிக்கைக்கு பதிலடியாக யோகேந்திர யாதவ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசியல் விவகாரக் குழுவில் இருந்து என்னையும் பிரசாந்த் பூஷணையும் நீக்க கட்சி எம்எல்ஏக்களிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து பெறப்பட்டது.

உட்கட்சி பூசல் தொடர்பாக ஆம் ஆத்மியின் லோக்பால் அமைப்பு விசாரணை நடத்துவது வழக்கம். ஆனால் எனது விவகாரத்தில் கட்சியின் லோக்பால் அமைப்பு விரும்பியபோதும் விசாரணை நடத்த அனுமதிக்கப்படவில்லை. உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பிரசாந்த் பூஷண் கூறும்போது, உட்கட்சி ஜனநாயகத்துக்காக தொடர்ந்து போராடுவேன். ஆம் ஆத்மி வழக்கமான அரசியல் கட்சியாகிவிடக் கூடாது. தனிநபரை முன்னிலைப்படுத்தும் கலாச்சாரம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், கட்சித் தலைமையின் தவறுகள் விரைவில் அம்பலமாகும் என்று தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை குறித்து கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் கூறியபோது, தனிநபர்களைவிட கட்சி பெரியது. கட்சியில் குறைந்தபட்ச ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்