பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில், சிறுபான்மையின மக்கள் மத்தியில் முற்போக்கான மனப்பான்மை ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநில சிறுபான்மையின ஆணையங்களின் 10-வது வருடாந்திர கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய சிறுபான்மையின இணை அமைச்சர் முகதர் அபாஸ் நக்வி, "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து இளைஞர்கள் மத்தியில் முற்போக்கான மனப்பான்மை நிலவுகிறது.
இதனால், தீவிரவாதிகளால் முஸ்லிம் இளைஞர்களை தவறாக வழிநடத்த முடியாமல் போய்விட்டது தீவிரவாதிகளின் தீய நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் இளைஞர்களின் ஆதரவு சரிந்துகொண்டு வருகிறது. முஸ்லிம் இளைஞர்கள் தேச துரோக சக்திகளை தனிமைப்படுத்திவிட்டனர். இதனால் அவர்கள் சோர்வுற்று இருக்கின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆட்சியில், அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தேச விரோத வழக்குகளில் கைது செய்யப்படுவது குறைந்துள்ளது.
இந்தப் பாதை சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பான வழித்தடத்தில் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கும் சூழல் பிரகாசமாக உள்ளது" என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago