சிகிச்சைக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக மருத்துவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு மும்பை நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மும்பை புறநகர் பாந்தூப் பகுதியில் நதீம் சலீம் ஷேக் என்பவர் ஆயுர்வதே க்ளினிக் நடத்தி வந்தார். இவரிடம் திருமணம் ஆன பெண் ஒருவர் குழந்தை பேறுக்காக சிகிச்சைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மயக்க மருந்து கொடுத்து அப்பெண்ணை சலீம் ஷேக் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணை மொபைல் போனில் ஆபாசமாக படம்பிடித்த மருத்துவர், அவற்றை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்புவேன் என்று கூறி மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை தொடர்ந்து மருத்துவரை கைதுசெய்த போலீஸார், ஆபாச படங்கள் கொண்ட அவரது மொபைல் போனை பறிமுதல் செய்தனர். மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி ஏ.எஸ்.ஷெண்டே கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
இதில் மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கிய நீதிபதி, தீர்ப்பு நகலை அளிப்பதற்கு மருத்துவரை வரும் 20-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
43 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago