தேர்வுக்குழு எவ்வித மாற்றமும் செய்யவில்லை: நிலக்கரி, சுரங்க மசோதாக்கள் நிறைவேறும்

By செய்திப்பிரிவு

சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதில் ஏல முறையை அறிமுகம் செய்ய வகை செய்யும் 2 அவசர சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள மசோதாக்கள் இந்த வாரத்தில் மாநிலங்களவையில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த மசோதாக் களுக்கு மக்களவை ஒப்புதல் வழங்கியது. மாநிலங்களவையில் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ் விரு மசோதாக்களையும் பரி சீலித்த தேர்வுக் குழுக்கள் எவ்வித மாற்றமும் இன்றி மாநிலங்கள வையில் நேற்று சமர்ப்பித்தன.

“நிலக்கரி சுரங்க (சிறப்பு ஏற்பாடு) மசோதா 2015-ஐ எவ்வித திருத்தமும் இல்லாமல் சட்டமாக இயற்றலாம் என தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது” என அனில் மாதவ் தவே தலைமை யிலான (பாஜக) 19 உறுப்பினர்கள் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

இதுபோல, சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் கனிமங்கள்) திருத்த மசோதா 2015-ஐயும் எவ்வித திருத்தமும் இன்றி சட்டமாக இயற்றலாம் என அதற்கான தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

எனினும், தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திமுக உள்ளிட்ட ஒருசில உறுப்பினர்கள் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரம், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பிஜு ஜனதா தளம், அதிமுக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சி கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரி விக்கவில்லை.

2 நாட்களுக்கு நீட்டிப்பு

இந்த 2 மசோதாக்கள் தொடர் பான அவசர சட்டங்களும் ஏப்ரல் 5-ம் தேதியுடன் காலாவதி ஆகின்றன. எனவே, இந்த மசோதாக்களை நிறைவேற்று வதில் அரசு உறுதியாக உள்ளது. தேவைப்பட்டால் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியை 2 நாட்களுக்கு (மார்ச் 23, 24) நீட்டிப்பது என நாடாளுமன்ற விவகார மத்திய அமைச்சரவைக் குழு நேற்று முடிவு செய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்