கோவாவில் விழுந்து நொறுங்கிய கடற்படை விமானம்: பெண் விமானியின் உடல் மீட்பு

By ஐஏஎன்எஸ்

கோவா கடலில் விழுந்து நொறுங்கிய கடற்படை விமானத்தின் பெண் விமானியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

கோவா மாநில கடற்பகுதியில் கடற்படைக்கு சொந்தமான டோர்னியர்-228 விமானம் புதன்கிழமை வழக்கமான ரோந்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

விமானத்தில் இருந்த நிகில் ஜோஷி என்ற விமான கண்காணிப்பாளர் மட்டும் மீனவரால் அன்றைய தினமே மீட்கப்பட்ட நிலையில், இரு விமானிகள் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பெண் விமானியான கிரண் ஷெகாவத்தின் உடல் இன்று (வெள்ளிக்கிழமை) கரை ஒதுங்கியது. இதனை கண்டறிந்த கடற்படை அதிகாரிகள் உடலை மீட்டனர். இறந்த விமானி கிரணுக்கு சமீபத்தில் கடற்படை அதிகாரியுடன் திருமணமானது.

இவர், டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் கடற்படை சார்பிலான அணிவகுப்பில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாயமான மற்றொரு விமானி அபினவ் நகோரியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) கடற்படையின் சோனார் கருவி பொருத்தப்பட்ட ஐ.என்.எஸ். மாகார், விமானத்தின் பாகம் ஒன்றை கடல் பகுதியில் கண்டறிந்தது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்