ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளன. அந்த மாநில முதல்வராக மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முப்தி முகமது சையது நேற்று முன்தினம் பதவியேற்றார்.
அன்றைய தினம் அவர் நிருபர்களிடம் பேசியபோது, எல்லைக்கு அப்பால் உள்ள மக்களின் ஒத்துழைப்பால்தான் காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது என்று தெரி வித்தார். பாகிஸ்தான் பிரிவினைவாதி களுக்கு ஆதரவாக அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சிலர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2013 பிப். 9-ம் தேதி அப்சல் குரு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் சிறை வளாகத்தில் அடக்கம் செய் யப்பட்டது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago